100 ஆண்டுகளுக்குப்பின் பாரிஸ் நகரின் சீன் ஆற்றில் மீண்டும் நீச்சலுக்கு அனுமதி
வாசிப்புநேரம் -
(படம்:unsplash)
பிரெஞ்சுத் தலைநகர் பாரிஸில் உள்ள சீன் ஆற்றில் நீந்த விரைவில் அனுமதி அளிக்கப்படவுள்ளது.
அழுக்கடைந்த நீரால் சுமார் 100 ஆண்டுகளாக அங்கு நீந்துவதற்கு எதிரான தடை நடப்பில் உள்ளது.
தற்போது அது 1.6 பில்லியன் டாலர் செலவில் சுத்தம் செய்யப்பட்டுள்ளதாக BBC செய்தி நிறுவனம் கூறியது.
அந்தச் சுத்திகரிப்புப் பணிகளின் கடைசிக் கட்டம் முழுமூச்சாக நடைபெறுகிறது.
அடுத்த ஆண்டு பாரிஸில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் சில சீன் ஆற்றில் இடம்பெறும் என்றது BBC.
2025ஆம் ஆண்டுக்குள் ஆற்றின் 3 பகுதிகள் பொதுமக்கள் நீந்துவதற்காகத் திறந்துவிடப்படும்.
சீன் ஆற்றில் கழிவுநீர் வெளியிடப்பட்டதால் அதில் நீந்துவதற்கு அதிகாரிகள் 1923ஆம் ஆண்டு தடை செய்தனர்.