கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் மிதக்கும் பாரிஸ்....ஆனால் மக்களிடம் கொண்டாட்ட உணர்வு மட்டுப்பட்டுள்ளது
வாசிப்புநேரம் -
(pixabay)
பிரான்ஸ் தலைநகரான பாரிஸ் (Paris) ஒளியூட்டு, அலங்காரம் எனக் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் மிதக்கிறது.
இருப்பினும் அதிகரிக்கும் பணவீக்கம், உயரும் உணவு, எரிபொருள் விலை ஆகியவை மக்களின் கொண்டாட்ட உணர்வை மட்டுப்படுத்தியுள்ளது.
கடைத்தொகுதிகளுக்குச் செல்வோர், சுற்றுப்பயணிகள், உள்ளூர்வாசிகள் என அனைவரையும் கவர்ந்து இழுக்கின்றன அலங்காரங்கள்.
ஆனாலும், பிரான்ஸில் பணவீக்கம் 6.2 விழுக்காடு என ஐரோப்பிய ஒன்றியத்தின் புள்ளிவிவர அமைப்பு தெரிவித்தது.
மக்கள் எரிபொருள் நெருக்கடி குறித்துக் கவலை அடைந்துள்ளனர்.
அதை முன்னிட்டுக் கிறிஸ்துமஸுக்கு முதல் நாளிலும் புத்தாண்டுக்கு முதல் நாளிலும் இரவு 11.45 மணிக்கெல்லாம் இந்த அழகிய ஒளியூட்டு ஓய்வெடுக்கச் சென்றுவிடும்.
இதர ஆண்டுகளில் நள்ளிரவுக்குப் பின் 2 மணிவரை விளக்குகள் வீதிகளை அலங்கரிப்பது வழக்கம்.
கிறிஸ்துமஸ் காலக்கட்டத்தில் 44 விழுக்காடு வரை எரிசக்தியை மிச்சப்படுத்த பாரிஸ் திட்டமிடுகிறது.
எனினும், ஒட்டுமொத்த அளவில் நிலவும் பருவநிலை மாற்றத்தை உலகத் தலைவர்கள் கையாளவேண்டும் என்று பாரிஸ்வாசிகள் விரும்புகின்றனர்.