நான் ஒரு மாவீரன்! பாரிசின் கடைசி செய்தித்தாள் வியாபாரி
This audio is generated by an AI tool.
பிரான்சில் செய்தித்தாள்களை விற்கும் 73 வயது அலி அக்பர் அக்பர் தான் ஒரு மாவீரன் என்று பெருமிதத்துடன் கூறுகிறார்.
பிரான்சின் ஆக உயரிய விருதை அதிபர் இம்மானுவெல் மக்ரோன் திரு அக்பருக்கு வழங்கினார்.
50 ஆண்டுக்கும் மேலாக பாரிஸ் வீதிகளில் செய்தித்தாள்களை விற்பனை செய்த அக்பருக்குக் கொடுக்கப்பட்ட கெளரவம் அது.
பாகிஸ்தானில் பிறந்தவர் திரு அக்பர். 1970களின் தொடக்கத்தில் அவர் பிரான்சில் தஞ்சம் புகுந்தார்.
தான் ஒருகாலத்தில் வீடின்றிக் கடும் வறுமையில் தவித்ததைத் திரு அக்பர் நினைவுகூர்ந்தார்.
மாலுமியாக வேலைசெய்த அவர் உணவகத்தில் தட்டுகளைக் கழுவும் வேலையையும் செய்திருப்பதாகச் சொன்னார்.
அதற்குப் பிறகு செய்தித்தாளைக் கையில் எடுத்தார்.
அன்றிலிருந்து இன்றுவரை செய்தித்தாள்களைப் பலருக்கு விற்றுவருகிறார் திரு அக்பர்.
'பிரெஞ்சு ஊடகத்தின் குரல்' அவர் என்று திரு அக்பரை அதிபர் மக்ரோன் பாராட்டினார்.