Skip to main content
பாரிஸ் ஒலிம்பிக்: கவனத்தை ஈர்த்த விளையாட்டாளர்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

பாரிஸ் ஒலிம்பிக்: கவனத்தை ஈர்த்த விளையாட்டாளர்கள்

வாசிப்புநேரம் -
கடந்த 2 வாரங்களாக நடைபெற்ற 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் மறக்கமுடியாத பல தருணங்கள் பதிவாகின.

அதற்குக் காரணமாக இருந்த சில விளையாட்டாளர்களைப் பட்டியலிட்டது 'செய்தி'.
படம்: Lionel BONAVENTURE / AFP
சிமோன் பைல்ஸ் (Simone Biles)

அமெரிக்காவைச் சேர்ந்த ஒலிம்பிக் சீருடற்பயிற்சி விளையாட்டாளர் சிமோன் பைல்ஸ் இம்முறை ஒலிம்பிக்கில் 3 தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

27 வயது சிமோன் ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை மொத்தம் 11 பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளார்.
காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்
யூஸோப் டிகேச் (Yusuf Dikec)

துருக்கியேவின் குறிசுடும் வீரர் டிகேச் மிக நிதானமாகப் போட்டியில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.

போட்டியின்போது அவர் மிகவும் சாதாரணமாக ஒரு கையைக் காற்சட்டை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு மற்றொரு கையில் துப்பாக்கியைப் பிடித்திருந்தார்.

குறிசுடும் போட்டிக்கான சிறப்புக் கண்ணாடிக்குப் பதிலாக வழக்கமான மூக்குக் கண்ணாடியை அவர் அணிந்திருந்தார். காதுகளிலும் அவர் சாதாரணமான ஒலித் தடுப்புக் கருவியை (earplug) அணிந்திருந்தார்.

51 வயது டிகேச்சின் அந்தப் படங்கள் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்தன.
படம்: Courtnee Downs/Facebook
சீனாவின் இசைக்கேற்ற சீருடற்பயிற்சி அணி

சீனாவின் இசைக்கேற்ற சீருடற்பயிற்சி அணி ஒலிம்பிக்கில் முதல்முறையாகத் தங்கப் பதக்கம் வென்றது.

இதன் வழி, 1996 ஒலிம்பிக்கிற்குப் பிறகு ஐரோப்பா அல்லாத அணி அப்போட்டியில் தங்கம் வென்ற சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இவர்களது சாதனைகளுக்கு மத்தியில் கடும் விமர்சனத்தை எதிர்நோக்கி இணையத்தில் பிரபலமாகியுள்ளார் ஆஸ்திரேலிய வீராங்கனை ரேச்சல் கன் (Rachael Gunn).

பாரிஸ் ஒலிம்பிக்கில் முதல்முறையாக 'breakdancing' போட்டி அறிமுகம் கண்டது. அதில் ஆஸ்திரேலிய வீராங்கனை ரேச்சல் கன் (Rachael Gunn) B-girl Raygun என்ற பெயரில் பங்கேற்றார்.

அமெரிக்கா, பிரான்ஸ், லித்துவேனியா ஆகிய நாடுகளுடான வீராங்கனைகளுடன் நேருக்கு நேர் மோதும் சுற்றில் கங்காருவைப் போன்று குதித்தும் தரையில் நீந்தியும் அவர் 'breakdance' செய்தார்.

ஆஸ்திரேலியாவைப் பிரதிநிதிக்க வேறு போட்டியாளரே இல்லையா என்ற கேள்விகள் அவருக்கெதிராக முன்வைக்கப்பட்டன.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்