ஒலிம்பிக் போட்டி - மனத்தில் நிற்கும் தருணங்கள்...

(படம்: AP/Aurelien Morissard)
பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகள் நிறைவுற்றிருக்கின்றன.
நிறைவு விழா நேற்று (11 ஆகஸ்ட்) சிறப்பாக நடந்தேறியது.
போட்டிகளில் பல முக்கிய, மனத்தில் நிற்கும் தருணங்கள் இருந்தன...
அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்...
🥇சீருடற்பயிற்சி விளையாட்டில் வெண்கலம், வெள்ளிப் பதக்கங்களை வென்ற ஜோர்டன் சைல்ஸும் (Jordan Chiles) சிமோன் பாயில்ஸும் தங்கப் பதக்கத்தைப் பெற்ற ரெபெக்கா அண்டிராடெவை (Rebeca Andrade) கௌரவிக்க மண்டியிட்டு மரியாதை செலுத்தினர். அண்டிராடேவை 'ராணி' என்று கூப்பிட்டு அவருக்குப் பெருமை சேர்த்தனர்.



