Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஒலிம்பிக் போட்டியின்போது பாரிஸில் வேலை நிறுத்தப் போராட்டம் நடக்கலாம்... குப்பை குவியுமா?

வாசிப்புநேரம் -
பாரிஸ் நகரில் குப்பைகளை அகற்றுவோர் கோடைகாலத்தின்போது வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடலாம்.

அந்தத் தகவலை பிரெஞ்சு ஊழியரணி ஒன்று தெரிவித்தது.

நகரில் ஒலிம்பிக் போட்டி நடைபெறும்போது வீதிகளில் குப்பைகள் குவியும் என்ற அச்சம் நிலவுகிறது.

வேலை நிறுத்தப் போராட்டம் இம்மாதம் தொடங்கி ஜூலை முதலாம் தேதியிலிருந்து செப்டம்பர் 8ஆம் தேதி வரை தொடரலாம்.

ஒலிம்பிக் போட்டி ஜூலை 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை இடம்பெறும்.

குப்பை அகற்றும் ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் கூடுதல் 400 யூரோக்கள் (சுமார் 480 சிங்கப்பூர் வெள்ளி) சம்பள உயர்வைக் கோருகின்றனர்.

ஒலிம்பிக் போட்டியின்போது வேலை செய்வதற்கு 1,900 யூரோக்கள் (சுமார் 2700 சிங்கப்பூர் வெள்ளி) போனஸையும் அவர்கள் கேட்கின்றனர்.

15 மில்லியன் சுற்றுப்பயணிகள் போட்டிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் குப்பைகளை அகற்றும் ஊழியர்களின் வேலையும் அதிகரிக்கும்.

1,200 யூரோக்கள் வரை போனஸ் வழங்கலாம் என்று பாரிஸ் நகர மண்டபம் கலந்து பேசியதாகக் கூறப்பட்டது.
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்