ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் பாரிஸில் எலித் தொல்லை
வாசிப்புநேரம் -
(படம்: AFP/PHILIPPE LOPEZ)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
இவ்வாண்டின் ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தயாராகும் பாரிஸ் நகரில் ஒரு பிரச்சினை...
போட்டிக்காக அங்கு வருவோர் எலிகளைப் பார்ப்பதைத் தவிர்க்க நகரம் முயற்சிகளை எடுக்கிறது.
நகருக்குப் பெருமை தரும் ஒலிம்பிக் போட்டிகளின்போது எலிகளின் தொல்லை இருந்தால் அது சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும் என்று குடியிருப்பாளர்கள் கருதுகின்றனர்.
ஒலிம்பிக் போட்டிகள், கொண்டாட்டங்கள் நடைபெறும் அனைத்து இடங்களும் துப்புரவு செய்யப்பட்டதாகத் துணை மேயர் AFPஇடம் கூறினார்.
உணவுக் கழிவுகளை அகற்றுவது, பாதாளச் சாக்கடைகளை மூடுவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
எலிகள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் பொறிகள் வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
பாரிஸ் நகரில் இருக்கும் அனைத்து எலிகளையும் ஒழிப்பது இலக்கல்ல, பாதாளச் சாக்கடைகளைப் பராமரிக்க அவை உதவுகின்றன, ஆனால் அவை சாக்கடைகளிலேயே இருக்கவேண்டும் என்றார் துணை மேயர்.

ஆதாரம் : AFP