Skip to main content
நடுவானில் உயிரிழந்த விமானப் பயணி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம் trending

நடுவானில் உயிரிழந்த விமானப் பயணி

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஹாங்காங்கிலிருந்து லண்டன் நோக்கிப் பயணம் செய்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் (British Airways) விமானத்தில் பயணி ஒருவர் நடுவானில் உயிரிழந்தார்.

விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே அந்த 60 வயது மதிக்கத்தக்க பெண் மாண்டார்.

ஆனால் விமானிகள் விமானத்தைத் திருப்புவதில்லை என முடிவெடுத்தனர்.

அந்தப் பெண்ணின் உடல் விமானத்தின் வால் பகுதியில் வைக்கப்பட்டது.

லண்டன் விமான நிலையத்தை நெருங்கியபோது விமானத்தில் துர்நாற்றம் வீசுவதாகப் பயணிகள் புகாரளிக்கத் தொடங்கினர்.

விமானம் தரையிறங்கியதும் காவல்துறையினர் விசாரணைக்குச் சென்றனர்.

331 பயணிகளையும் சுமார் 45 நிமிடங்கள் தங்கள் இருக்கைகளிலேயே காத்திருக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

மரணமடைந்த பெண்ணின் அடையாளம் அல்லது இறப்பிற்கான காரணம் குறித்து அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள விமான நிறுவனம் அனைத்து நடைமுறைகளும் சரியாக மேற்கொள்ளப்பட்டதாகக் கூறியது.

ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்