Skip to main content
பிரேசிலில் விமான விபத்து
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரேசிலில் விமான விபத்து - 61 பேர் மாண்டனர்

வாசிப்புநேரம் -
பிரேசிலில் விமான விபத்து - 61 பேர் மாண்டனர்

(படம்: AP/Andre Penner)

பிரேசிலில் நடந்த விமான விபத்தில் அதில் பயணம் செய்த அனைவரும் மாண்டனர்.

57 பயணிகளும், சிப்பந்திகள் நால்வரும் அந்த விமானத்தில் இருந்தனர்.

2007ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரேசிலில் நடந்த மிக மோசமான விமான விபத்து அது.

பிரேசிலின் தென் மாநிலமான பரானாவிலிருந்து (Paraná) சாவ் பாவ்லோ (Sao Paulo) நகருக்குச் சென்று கொண்டிருந்தது விமானம்.

வழியில் வின்யேடோ (Vinhedo) நகரில் அது விழுந்து நொறுங்கியது.

விமானம் செங்குத்தாகக் கீழிறங்கி சுழன்று விழுவதை காணொளிகளில் பார்க்க முடிகிறது.

குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்தது. நல்லவேளை எவரும் காயமடையவில்லை.

2010இல் தயாரிக்கப்பட்ட விமானம் பறப்பதற்கு ஏற்ற நிலையில் இருந்தது. முறையான பதிவும், சான்றுகளும் அதை உறுதிப்படுத்தின.

பிரேசில் விமான விபத்துத் தடுப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது.
ஆதாரம் : AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்