Skip to main content
இந்தியாவில் ரயில் விபத்து
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

இந்தியாவில் ரயில் விபத்து - குறைந்தது 11 பேர் மரணம்

வாசிப்புநேரம் -
இந்தியாவின் மத்தியப் பகுதியில் பயணிகள் ரயில் ஒன்று சரக்கு ரயிலோடு மோதியது.

குறைந்தது 11 பேர் உயிரிழந்தனர்.

சட்டிஸ்கர் (Chhattisgarh) மாநிலத்தின் பிலாஸ்பூர் (Bilaspur) நகரில் அந்த விபத்து நேர்ந்தது.

பயணி செல்லும் ரயில் சரக்கு ரயிலின் பின்பகுதியில் மோதியது.

அப்போது ரயிலின் ஒருபகுதி சரக்கு ரயிலின் மேல் ஏறியது.

பல மணிநேர முயற்சிக்குப் பிறகு மீட்புக்குழுவினர் அந்த ரயில் பகுதியைக் கீழே கொண்டுவந்தனர்.

அதில் 3 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

மீட்புப்பணிகள் இன்று காலை முடிவடைந்தன.

விபத்து நடந்த இடத்தில் ரயில்கள் வழக்கம்போல் செல்லத் தொடங்கிவிட்டதாக மூத்த அரசாங்க அதிகாரி சஞ்சய் அகர்வால் (Sanjay Agarwal) தெரிவித்தார்.

பயணிகள் ரயிலின் ஓட்டுநர் விபத்தில் மாண்டதாகக் கூறப்படுகிறது.

இணை ஓட்டுநருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் திரு சஞ்சய் கூறினார்.

சுமார் 20 பேர் விபத்தில் காயமுற்றனர்.

அவர்களுக்கு உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மாண்டோர், காயமுற்றோர் ஆகியோரின் குடும்பத்தாருக்கு நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் : AP

மேலும் செய்திகள் கட்டுரைகள்