Skip to main content
பினாங்கில் படகு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

பினாங்கில் படகு-கப்பல் விபத்து - 21 பேர் காயம்

வாசிப்புநேரம் -
பினாங்கில் படகு-கப்பல் விபத்து - 21 பேர் காயம்

காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பினாங்கில் படகும் கப்பலும் மோதிக் கொண்ட விபத்தில் 21 பயணிகள் காயம் அடைந்திருக்கின்றனர்.

சம்பவம் செப்டம்பர் 1ஆம் தேதி இரவு 8.40 மணியளவில் நடந்ததாகப் பினாங்கின் துறைமுக ஆணையம் சொன்னது.

MV Mekar Jaya கப்பல் பட்டர்வர்த்திலிருந்து (Butterworth) ஸ்வெட்டன்ஹம் படகு முனையத்துக்குச் (Swettenham Pier Cruise Terminal) சென்றுகொண்டிருந்தபோது படகுடன் மோதியது.

படகு பெங்காலான் சுல்தான் அப்துல் ஹலீம் (Pengkalan Sultan Abdul Halim) முனையத்துக்குச் சென்றுகொண்டிருந்தது.

படகில் இருந்த மோட்டார்சைக்கிள்கள் பல கவிழ்ந்தன. அதன் காணொளி இணையத்தில் பரவுகிறது.

சம்பவத்துக்கான காரணம் தெரியவில்லை. பயணிகளின் காயங்கள் எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதும் தெரியவில்லை. விசாரணை நடக்கிறது.

பயணிகளின் நலனை விசாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஆணையத்தின் தலைவர் கூறினார்.

துறைமுகம் சீராகச் செயல்படுவதில் அதிகக் கவனம் செலுத்தப்படுவதாக அவர் சொன்னார்.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்