Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஹிட்லருக்குக் கொடுக்கப்பட்ட பென்சில்... ஏலத்தில் 80,000 பவுண்டுக்கு விற்பனையாகலாம்

வாசிப்புநேரம் -
அடோல்ஃப் ஹிட்லருக்குச் சொந்தமானது என்று நம்பப்படும் பென்சில் 80,000 பவுண்டு வரையிலான தொகைக்கு ஏலத்தில் விற்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அது அடுத்த மாதம் வட அயர்லந்தின் பெல்ஃபாஸ்ட் நகரில் ஏலம் விடப்படும்.

1941ஆம் ஆண்டு அந்தப் பென்சிலை ஹிட்லருக்கு 52ஆவது பிறந்த நாள் பரிசாக அவரின் நீண்ட நாள் காதலி எவா பிரான் (Eva Braun) கொடுத்தார் என்று நம்பப்படுகிறது.

அதில் 'எவா' என்று ஜெர்மானிய மொழியிலும் "AH" என்ற எழுத்துகளும் உள்ளன என்று The Guardian செய்தி நிறுவனம் சொன்னது.

அதை 2002ஆம் ஆண்டு ஒருவர் ஏலத்தில் வாங்கினார்.

அது ஜூன் 6ஆம் தேதி நடைபெறவுள்ள Bloomfield ஏலத்தில் மீண்டும் விற்கப்படும்.

அதனுடன் கையெழுத்திடப்பட்ட ஹிட்லரின் படம், விக்டோரியா அரசியார் வழங்கிய, கையால் எழுதப்பட்ட மன்னிப்பு ஆவணம் ஆகியவையும் ஏலம் விடப்படும் என்று The Guardian குறிப்பிட்டது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்