Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சண்டை நிறுத்தத்தை அறிவியுங்கள்! - ரஷ்யாவைக் கோரிய அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு

வாசிப்புநேரம் -

உடனடியாகச் சண்டை நிறுத்தத்தை அறிவிக்கும்படி ரஷ்யாவை அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு கோரியுள்ளது.

அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் (Lloyd Austin) ரஷ்யத் தற்காப்பு அமைச்சர் செர்கே ஷோய்குவுடன் (Sergei Shoigu) தொலைபேசிவழி உரையாற்றினார்.

ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதிலிருந்து இதுவே அவர்களுக்கு இடையிலான முதல் நேரடிக் கலந்துரையாடல்.

சண்டைநிறுத்தத்தை அறிவிக்கும்படியும் இருதரப்புத் தொடர்பை நிலைநாட்டும்படியும் அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு வலியுறுத்தியதாகக் கூறப்பட்டது.

உக்ரேன் நிலவரம் உட்பட அனைத்துலகப் பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடியதாக ரஷ்யத் தற்காப்பு அமைச்சு சொன்னது.

இருப்பினும் போர் நிலவரத்தில் முக்கிய முன்னேற்றம் ஏதும் நடைபெறவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் முக்கிய தொடர்புத் தளம் மட்டும் அமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டது.

-AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்