உலகம் trending
கோட்டையைக் கயிற்றால் கட்டி இழுத்த மக்கள்!
வாசிப்புநேரம் -
படம்: X/@Mayor_Hirosaki
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
ஜப்பானின் ஹிரொசாக்கி (Hirosaki) கோட்டையின் ஒரு பகுதியை மக்கள் கயிற்றைக் கட்டி இழுக்கின்றனர்.
சுமார் 1,800 பேர்...
இதுவரை 2 மீட்டர் தூரம் இழுத்திருக்கின்றனர்.
360 டன் எடையுள்ள கோட்டையை மக்கள் எதற்காக இழுக்கின்றனர்?
கோட்டையின் ஒரு சுவர் நிலநடுக்கத்தில் சேதமடைந்தது.
அதைச் சீரமைக்கக் கட்டடம் நகர்த்தப்பட்டது.
டிசம்பர் 2024இல் சுவரின் சீரமைப்புப் பணி முடிவடைந்தது.
பிறகு கட்டடத்தை முன்பிருந்த இடத்துக்கு மாற்ற முடிவெடுக்கப்பட்டது.
ஹிக்கியா (hikiya) எனும் பாரம்பரிய ஜப்பானியக் கட்டடப் பராமரிப்புக் கலையைப் பின்பற்றத் திட்டமிடப்பட்டது.
கட்டடத்தை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு மாற்ற அதை முழுமையாகத் தண்டவாளத்தில் வைத்து இழுக்கும் செயல்முறை ஹிக்கியா.
கோட்டை முக்கியக் கலாசாரக் கட்டடமாய் அதிகாரபூர்வ அங்கீகாரம் பெற்றிருப்பதால் அது சேதமாகாமல் இருக்க ஹிக்கியாவைப் பின்பற்றியதாக ஹிரொசாக்கி நகரின் பூங்காத் துறைத் தலைவர் குறிப்பிட்டார்.
கட்டடத்தை இழுக்கச் சுமார் 8,000 பேர் விண்ணப்பித்தனர்; அவர்களில் பலர் வெளிநாட்டினர் என்று அவர் பகிர்ந்தார்.

ஆதாரம் : Others