Skip to main content
குப்பை மேட்டில் சாக்லெட்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம் trending

குப்பை மேட்டில் சாக்லெட் - அள்ளிச் சென்ற மக்கள்

வாசிப்புநேரம் -
குப்பை மேட்டில் சாக்லெட் - அள்ளிச் சென்ற மக்கள்

காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்: X/Dealsdhamaka

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

இந்தியாவின் கான்பூர் (Kanpur) நகரில் சாக்லெட், தின்பண்டங்களை மக்கள் அவசர அவசரமாக அள்ளிச்செல்லும் காணொளி வெளிவந்துள்ளது.

அவை காலாவதியான தின்பண்டங்கள் என நம்பப்படுகிறது.

பான்கி (Panki) தொழிற்பேட்டையில் உள்ள குப்பை மேட்டில் தின்பண்டங்கள் குவிந்துகிடந்தன.

அவற்றை யார் அங்கு வீசியது என்பதைக் காவல்துறை விசாரித்துவருகிறது.

மக்கள் கூடி, தின்பண்டங்களை விறுவிறுவென அள்ளிப் பைகளில் போட்டு எடுத்துச்செல்வது காணொளியில் தெரிகிறது.

மோட்டார் சைக்கிள்களிலும் கார்களிலும் வந்த சிலர்,
தின்பண்டங்களை எடுத்துச் செல்ல சாலையோரத்தில் நின்றனர்.

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகச் செய்தி ஊடங்கங்கள் தெரிவித்தன.

அந்தத் தின்பண்டங்கள் 2024ஆம் ஆண்டிலேயே காலாவதியாகிவிட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர் என்று NDTV செய்தித்தளம் சொன்னது.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்