மலேசியப் பேருந்து விபத்து: கருத்து சொல்ல வேண்டாம் என்று ஓட்டுநருக்கு அறிவுரை
வாசிப்புநேரம் -

படம்: AFP PHOTO / Perak's Fire and Rescue Department
மலேசியாவின் பேராக் (Perak) மாநிலத்தில் 15 பல்கலைக்கழக மாணவர்கள் மாண்ட விபத்தில் தொடர்புடைய பேருந்து ஓட்டுநரைப் பொதுவில் கருத்துகள் பகிர வேண்டாம் என்று காவல்துறை அறிவுறுத்தியிருக்கிறது.
அதிகாரபூர்வ வாக்குமூலம் பெறப்படும்வரை கருத்துகள் தெரிவிப்பதிலிருந்து விலகியிருக்குமாறு காவல்துறை ஓட்டுநரைக் கேட்டுக்கொண்டது.
தேவையில்லாத கருத்துகள் விசாரணையைப் பாதிக்கலாம் என்று பேராக் மாநிலக் காவல்துறைத் தலைவர் சொன்னார்.
நடந்த விபத்து பற்றிப் பேச ஓட்டுநருக்கு எல்லா வகையிலும் உரிமை இருக்கிறது என்றாலும் பொறுமை மிக அவசியம் என அவர் கூறினார்.
ஓட்டுநர் காயங்களுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது ரத்தம் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஆதாரம் : Others/The Star