வாசனைத் திரவியக் கிடங்கில் தீ - துருக்கியேவில் 6 பேர் மரணம்
This audio is generated by an AI tool.
துருக்கியேவின் வட மேற்கே டிலோவசி (Dilovasi) நகரில் தீ விபத்தில் சிக்கி 6 பேர் மாண்டனர்.
வாசனைத் திரவியக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.
சிறிது நேரத்தில் நெருப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதற்குள் கிடங்கின் இரண்டு மாடிகளும் நாசமாயின.
தீ அருகில் இருந்த தொழிற்சாலைகளுக்கும் பரவியது.
தீ ஏற்பட்டபோது வெடிப்புச் சத்தத்தைக் கேட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
மாண்டோரில் 16, 17 வயதுடைய பெண்கள் இருவர் இருந்தனர்.
சம்பவத்தில் ஐவர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
வாசனைத் திரவியக் கிடங்கின் உரிமையாளரும் அவரின் மூத்த ஊழியர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தீ பரவியதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை தொடர்கிறது.