Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

AUKUS பங்காளித்துவ உடன்பாட்டுக்கு பிலிப்பீன்ஸ் ஆதரவு

AUKUS பங்காளித்துவ உடன்பாட்டுக்கு பிலிப்பீன்ஸ் ஆதரவு

வாசிப்புநேரம் -

AUKUS பங்காளித்துவ உடன்பாட்டுக்கு பிலிப்பீன்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.

அந்தப் புதிய ஒப்பந்தத்தின் மூலம், ஆஸ்திரேலியாவுக்கு அணுவாற்றல் நீர்மூழ்கிக் கப்பல் தொழில்நுட்பம் கிடைக்கவுள்ளது.

இந்தோ-பசிபிக் வட்டாரத்தில் அதிகாரச் சமநிலையைப் பேண புதிய உடன்பாடு உதவும் என்று நம்புவதாக மணிலா தெரிவித்தது.

நட்பு நாடுகள் தங்கள் அதிகார பலத்தைப் பெருக்குவதால், சமநிலை ஏற்படுமே தவிர, சீர்குலைவுக்கு வாய்ப்பில்லை என்று பிலிப்பீன்ஸ் வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார்.

இருப்பினும், புதிய AUKUS ஒப்பந்தம், வட்டாரத்தில் ஆயுதப் போட்டியைத் தூண்டக்கூடும் என்று இந்தோனேசியாவும், மலேசியாவும் எச்சரித்தன.

பிலிப்பீன்ஸில் பதற்றம் எழுவதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று
தென் சீனக் கடற்பகுதி விவகாரம்.

பிலிப்பீன்ஸ், தனது சிறப்புப் பொருளியல் பகுதியாகக் கருதும் அந்த வட்டாரத்தில் சீனா நூற்றுக்கணக்கான ராணுவக் கப்பல்களை நிறுத்தியுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்