Skip to main content
‘எதுவும் தடுக்க முடியாது’: வெள்ளத்திலும் இணைந்த காதல் ஜோடி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

‘எதுவும் தடுக்க முடியாது’: வெள்ளத்திலும் இணைந்த காதல் ஜோடி

வாசிப்புநேரம் -
‘எதுவும் தடுக்க முடியாது’: வெள்ளத்திலும் இணைந்த காதல் ஜோடி

(படம்: Facebook/St. John the Baptist Parish Hagonoy, Bulacan)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பிலிப்பீன்ஸில் இடுப்பளவு வெள்ளம் சூழ்ந்த தேவாலயத்துக்குள் ஒரு ஜோடி திருமணம் செய்துள்ளது.

மணிலாவுக்கு (Manila) வடக்கே உள்ள ஹகோனோய் (Hagonoy) நகரின் செயிண்ட் ஜான் தி பேப்டிஸ்ட் (Saint John the Baptist) கத்தோலிக்க தேவாலயத்தில் திருமணம் நடந்தது.

கடந்த ஒரு மாதமாகப் பெய்துவரும் கனமழையால் தேவாலயத்தில் வெள்ள நீர் தேங்கியது.

இருந்தபோதும் இம்மாதம் முதல் தேதி ஜோடி திட்டமிட்டபடி திருமணம் செய்துகொண்டது.

வெள்ளைத் திருமண உடையில் வெள்ளநீருக்குள் மெதுவாக நடந்து சென்ற மணமகள் லெயான் லீசா கலாங் (Leian Lieza Galang) மணமகன் கில்பர்ட் சிக்கோவைக் (Gilbert Chico) கரம்பிடித்தார்.

திருமணத்தைத் தள்ளிவைக்க தேவாலயம் அறிவுறுத்தியது. ஆனால் இருவரும் திருமணத்தை நடத்துவதில் உறுதியாக இருந்தனர். பாதிரியாரும் சுருக்கமாகத் திருமணச் சடங்கை நடத்தினார்.

15க்கும் குறைவானோர் திருமணத்தில் கலந்துகொண்டனர்.

வெள்ளத்தில் பாதுகாப்பாக நடப்பதற்காக மணப்பெணின் திருமண உடையின் பின்பகுதியின் அளவு குறைக்கப்பட்டது.

மத்திய கிழக்கில் பணிபுரியும் திரு சிக்கோ திருமணத்தை முதலில் டிசம்பரில் நடத்தத் திட்டமிட்டிருந்தார்.

அண்மையில் அவருக்குக் கணுக்காலில் காயம் எற்பட்டது. அதனால் அவர் முன்கூட்டியே நாடு திரும்பினார்.

மீண்டும் வேலைக்குச் செல்வதற்கு முன் திருமணத்தை நடத்த முடிவெடுத்ததாகச் சொன்னார்.

 
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்