Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

சட்டவிரோத இணையச் சூதாட்டம்: பிலிப்பீன்ஸில் வெளிநாட்டினர் 200க்கும் அதிகமானோர் கைது

வாசிப்புநேரம் -
சட்டவிரோத இணையச் சூதாட்டம்: பிலிப்பீன்ஸில் வெளிநாட்டினர் 200க்கும் அதிகமானோர் கைது

படம்: AFP/Jam Sta Rosa

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பிலிப்பீன்ஸில் சட்டவிரோத இணையச் சூதாட்டத்தின் தொடர்பில் 200க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் பெரும்பாலோர் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்று குடிநுழைவுப் பிரிவு தெரிவித்தது.

மிண்டனாவ் (Mindanao) பகுதியில் இரண்டு இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

முதல் இடத்தில் 110 சீன நாட்டவர்கள், இரண்டு கம்போடியர்கள், ஹாங்காங்கைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டனர்.

மற்றோர் இடத்தில் வெளிநாட்டினர் 131 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் பெரும்பாலோர் சீன நாட்டவர்கள்.

மலேசியா, இந்தோனேசியா, மியன்மார் நாட்டவர்களும் அவர்களில் அடங்குவர்.

சோதனையில் ஏராளமான கணினிகள், கைத்தொலைபேசிகள், மடிக்கணினிகள், SIM அட்டைகள் கைப்பற்றப்பட்டன.

ஏன் POGOக்குத் தடை?

POGO எனப்படும் இணையச் சூதாட்ட நிறுவனங்களுக்கு பிலிப்பீன்ஸ் 2024ல் தடை விதித்தது.

மனிதக் கடத்தல், பணமோசடி, இணைய மோசடி, ஆள்கடத்தல், கொலை போன்ற குற்றங்களை மறைக்க சில குற்றக் கும்பல்கள் அவற்றைப் பயன்படுத்தியதாக அதிகாரிகள் கூறினர்.

தற்போது கைது செய்யப்பட்டவர்களில் சிலருக்கு மனிதக் கடத்தலில் தொடர்பு உள்ளதா என்பது விசாரிக்கப்படுகிறது.

மற்றவர்கள் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படுவர்.

இந்த நடவடிக்கை 2026ல் இதுவரை நடத்தப்பட்ட ஆகப் பெரிய POGO சோதனை என்று பிலிப்பீன்ஸ் குடிநுழைவுப் பிரிவு தெரிவித்தது.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்