Skip to main content
பிலிப்பீன்ஸ் நிலநடுக்கத்தால் துண்டிக்கப்பட்ட கிராமங்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

பிலிப்பீன்ஸ் நிலநடுக்கத்தால் துண்டிக்கப்பட்ட கிராமங்கள் - சென்றடைந்த உதவி

வாசிப்புநேரம் -
பிலிப்பீன்ஸ் நிலநடுக்கத்தால் துண்டிக்கப்பட்ட கிராமங்கள் - சென்றடைந்த உதவி

படம்: AFP via Philippine Coast Guard

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பிலிப்பீன்ஸை நிலநடுக்கம் உலுக்கி ஒரு வாரம் ஆன நிலையில் தொலைதூரத்தில் வசிக்கும் மக்களுக்கு உதவி சென்று சேர்ந்துள்ளது.

7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.

அதனால் சில கிராமங்களுக்கு இட்டுச்சென்ற பாதைகள் துண்டிக்கப்பட்டன.

ராணுவமும் கரையோரக் காவற்படையும் ஹெலிகாப்டர்களை அனுப்பியதாகப் பிலிப்பீன்ஸின் சமூக நல அமைச்சு சொன்னது.

அவற்றை கொண்டு முதற்கட்ட உணவுப் பொட்டலங்கள் கொண்டு சேர்க்கப்பட்டன.

மலைப்பகுதிகளுக்குச் செல்வது தொடர்ந்து சிக்கலாக இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

நிலச்சரிவுகள், நிலையில்லாத நிலப்பரப்பு, மின்சார துண்டிப்பு ஆகியவற்றால் சிலரைத் தொடர்புகொள்ள முடியவில்லை.

பின்-அதிர்வுகள் வட்டாரத்தைத் தொடர்ந்து உலுக்குகின்றன.

நிலநடுக்கத்தால் மாண்டோர் எண்ணிக்கை 61க்கு உயர்ந்தது.

33 பேரைக் காணவில்லை.

சுமார் 1,200 பேர் காயமுற்றனர்.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்