கைதான பிலிப்பீன்ஸின் முன்னாள் அதிபர் நெதர்லந்துக்கு அனுப்பப்பட்டார்

Reuters
பிலிப்பீன்ஸின் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுட்டார்ட்டே (Rodrigo Duterte) நெதர்லந்தில் உள்ள தி ஹேக் (The Hague) நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.
அங்கு அவர் அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்துக்கு முன் நிறுத்தப்படுவார்.
டுட்டார்ட்டே நேற்று (11 மார்ச்) பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவின் அனைத்துலக விமான நிலையத்தில் அனைத்துலகக் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
போதைப்பொருள்களுக்கு எதிராக அவர் மேற்கொண்ட கடும் நடவடிக்கையில் 6,000க்கும் அதிகமானோர் கொலை செய்யப்பட்டதாக அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் சந்தேகிக்கிறது.
அந்தக் குற்றச்சாட்டுகளை முன்னாள் அதிபர் டுட்டார்ட்டே மறுத்திருக்கிறார்.
சுய தற்காப்புக்காக மட்டுமே காவல்துறையினர் கொலைசெய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்ததாக அவர் கூறுகிறார்.