சூறாவளியில் சிக்கியோரை மீட்கச்சென்ற ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் மரணம்
பிலிப்பீன்ஸில் கால்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கியோரை மீட்கச்சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.
அதில் இருந்த 6 பேரும் மாண்டனர்.
Super Huey ஹெலிகாப்டர் மிண்டானவ் (Mindanao) பகுதியில் உள்ள புட்டுவான் (Butuan) நகருக்குச் செல்லும் வழியில் விபத்தில் சிக்கியது.
விபத்து எப்படி ஏற்பட்டது என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
6 உடல்கள் மீட்கப்பட்டதாகவும் மாண்டோரின் அடையாளம் உறுதிசெய்யப்படுவதாகவும் ஆகாயப்படையினர் கூறினர்.
ஹெலிகாப்டரில் விமானிகள் இருவரும் சிப்பந்திகள் நால்வரும் இருந்ததாகத் தெரிகிறது.
கால்மேகி சூறாவளியால் பிலிப்பீன்ஸின் மத்திய பகுதி பாதிக்கப்பட்டுள்ளது.
சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தில் 40க்கும் அதிகமானோர் மாண்டனர்.
ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மீட்புப் பணிகள் தொடர்கின்றன.