துணையதிபர் மீது குற்றச்சாட்டு சுமத்த வேண்டாம் - பிலிப்பீன்ஸ் அதிபர்
பிலிப்பீன்ஸ் அதிபர் பெர்டினண்ட் மார்க்கோஸ் ஜூனியர் (Ferdinand Marcos Junior), துணையதிபர் சாரா டுட்டார்டே (Sara Duterte) மீது அரசியல் குற்றச்சாட்டு சுமத்த வேண்டாம் என்று நாடாளுமன்றத்தைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
கடந்த வார இறுதியில் திருவாட்டி டுட்டார்டே திரு மார்க்கோஸின் உயிருக்கு அச்சுறுத்தல் தரும் வகையில் மிரட்டல் விடுத்தார்.
அவ்வாறு செய்வது நேரத்தை வீணாக்கும், யாருக்கும் உதவாது என்று திரு மார்க்கோஸ் கூறினார்.
திருவாட்டி டுட்டார்டேயுடனான சந்திப்பை அதிகாரிகள் ஒத்திவைத்ததைத் தொடர்ந்து திரு மார்க்கோஸின் கருத்துகள் வந்தன.
திருவாட்டி டுட்டார்டே தேசியப் புலனாய்வுப் பிரிவைச் சந்தித்துப் பேச வேண்டியதாக இருந்தது.
தாம் படுகொலை செய்யப்பட்டால், அதிபர் மார்க்கோஸ், அவரது மனைவி, நாடாளுமன்ற நாயகர் ஆகியோர் கொல்லப்படுவர் என்று திருவாட்டி டுட்டார்டே கூறியிருந்தார்.