Skip to main content
"குப்பை தாருங்கள், அரிசி தருகிறோம்"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

"குப்பை தாருங்கள், அரிசி தருகிறோம்"

வாசிப்புநேரம் -
"குப்பை தாருங்கள், அரிசி தருகிறோம்"

REUTERS/Lisa Marie David

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பிலிப்பீன்ஸ் நகரம் ஒன்று கடற்கரையைச் சுத்தமாக வைத்திருக்க வித்தியாசமான முயற்சியில் இறங்கியுள்ளது.

பட்டாங்காஸ் (Batangas) வட்டாரத்தின் மாபினி (Mabini) நகரில் குப்பை சேகரிக்கும் குடியிருப்பாளர்களுக்கு அரிசி வழங்கப்படுகிறது.

குப்பை நிரம்பிய பை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மூட்டை அரிசி வழங்கப்படுவதாகத் தொண்டூழியர்கள் கூறினர்.

குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு அது பெரும் உதவியாக இருக்கிறது.

அதிகரிக்கும் விலைவாசியைச் சமாளிக்க முடிவதாக அவை கூறின.

"ஒரு மாதத்துக்கு நாலரை மூட்டை அரிசி தேவை. இப்போது 2 மூட்டைகள் வாங்கினால் போதும்" என்று குடியிருப்பாளர் ஒருவர் சொன்னார்.

குப்பைக்கு அரிசி தரும் திட்டம் 2 ஆண்டாக நடத்தப்படுகிறது.

அதன் கீழ் 2.6 டன் அரிசி விநியோகிக்கப்பட்டுள்ளது.

கரைகளிலிருந்து 4,300 கிலோகிராம் பிளாஸ்டிக் குப்பையும் அகற்றப்பட்டது.

பெருங்கடல்களில் பிளாஸ்டிக் குப்பை அதிகம் போடும் நாடுகளில் பிலிப்பீன்ஸுக்கு முதல் இடம். 

கடல்களில் சேரும் மொத்தக் குப்பையில் அதன் பங்கு 36 விழுக்காடு!.

ஆதாரம் : Reuters

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்