Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

2 மாதங்கள் பனியில் சிக்கிய கைத்தொலைபேசி... மீட்கப்பட்டதும் முழுமையாக இயங்குகிறது

வாசிப்புநேரம் -
இங்கிலாந்தில் உள்ள பனிச்சறுக்குத் தளத்தினுள் தவறுதலாக விழுந்த கைத்தொலைபேசி அதன் உரிமையாளரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.

8 வாரங்களுக்கு அது பனியில் உறைந்திருந்ததாக BBC செய்தி நிறுவனம் தெரிவித்தது.

நவம்பரில் தளத்தினுள் சுமார் 60,000 லிட்டர் தண்ணீர் ஊற்றப்பட்ட பிறகு கைத்தொலைபேசி அங்கு சிக்கிக்கொண்டது.

அது தளத்தின் கட்டுமானத்தில் உதவிய ஊழியரின் மகளுக்குச் சொந்தமானது.

மீட்கப்பட்ட கைத்தொலைபேசி எப்போதும் போல் செயல்படுவதைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.

தளத்தின் இரும்புக் கட்டமைப்பு மீது அது தவறுதலாக வைக்கப்பட்டதாக BBC தெரிவித்தது.

பனியில் சிக்கிய அதன் மீது மக்கள் பல்லாயிரம் முறை சறுக்கிச் சென்றனர்.

கைத்தொலைபேசி மீண்டும் கிடைத்தது தமது மகளுக்கு அளவில்லா ஆனந்தம் என்று ஊழியர் சொன்னார்.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்