உலகம் trending
கிள்ளான் மருத்துவமனையில் புறாக்கள் அட்டகாசம் - பரவும் காணொளி
வாசிப்புநேரம் -
காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படங்கள்
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
மலேசியாவின் கிள்ளான் (Klang) நகரில் அமைந்துள்ள அரசாங்க மருத்துவமனையில் புறாக்கள் நோயாளிகளின் உணவை உட்கொள்ளும் காணொளி இணையத்தில் பரவி வருகிறது.
தெங்கு அம்புவான் ரஹிமா (Tengku Ampuan Rahimah) மருத்துவமனைக்கு அருகே உள்ள மரங்களில் புறாக்கள் கூடுகட்டி வாழ்ந்ததாகக் கூறப்பட்டது.
இதனால் அவ்வப்போது பறவைகள் மருத்துவமனைக்குள் சன்னல் வழியாக நுழைந்தன.
இணையவாசிகளிடையே காணொளி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பலரும் அதைக் கண்டித்தனர்.
நிலைமையைச் சமாளிக்க வழக்கமான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் வார்டுகளையும் கட்டடங்களையும் தொடர்ந்து கண்காணித்ததாகவும் மருத்துவமனை தெரிவித்தது.
நோயாளிகள், வருகையாளர்கள், ஊழியர்கள் ஆகியோருக்கு மருத்துவமனை பாதுகாப்பாகவும் சுத்தமாகவும் இருக்கும் என்று நிறுவனம் அறிக்கையில் உறுதி தெரிவித்தது.
இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழ்வதைத் தவிர்க்க பொருத்தமான நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று மருத்துவமனை கூறியது.

ஆதாரம் : Others