Skip to main content
இளஞ்சிவப்பு வானம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

இளஞ்சிவப்பு வானம் - பிரிட்டனில்

வாசிப்புநேரம் -
இளஞ்சிவப்பு வானம் - பிரிட்டனில்
படம்: X/@Matt_Miller_
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பிரிட்டனின் பர்மிங்ஹாம் (Birmingham) நகரில் ஓர் அரிய காட்சி!

வானம் இளஞ்சிவப்பாக மாறியது.

எதனால் அவ்வாறு காட்சியளித்தது? சூரியன் மறைந்த நேரத்தில் நிகழ்ந்ததா? அல்லது Northern Lights எனும் இயற்கை நிகழ்வா?

படம்: X/@shadowserenade_

இரண்டும் இல்லை.

நகரிலிருக்கும் காற்பந்துத் திடலில் இளஞ்சிவப்பு LED விளக்குகள் பயன்படுத்தப்பட்டன. அதனால் வானமும் இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது.

செய்தியை BBC ஊடகம் வெளியிட்டது.

தற்போது ஐரோப்பாவில் பனிக்காலம். எங்கும் பனி கொட்டுகிறது.

படம்: X/@Naseemio123

கொட்டும் பனியும் மேகங்களும் விளக்கின் ஒளியைப் பிரதிபலிக்கின்றன. அதனால் திடலில் பயன்படுத்தப்பட்ட இளஞ்சிவப்பு விளக்குகளின் ஒளி நகர் முழுவதும் பிரதிபலிக்கப்பட்டது.

சில நாள்களுக்கு முன்னர் அருகிலிருக்கும் ஹெட்நெஸ்ஃபொர்ட் (Hednesford) நகரிலும் இத்தகைய சம்பவம் நடந்தது.

ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்