CNN நிறுவனர் டெட் டர்னர் காலமானார்
படம்: AFP/Saul Loeb
CNN செய்தி நிறுவனத்தைத் தொடங்கிய அமெரிக்கத் தொழிலதிபர் டெட் டர்னர் (Ted Turner)87 வயதில் காலமானார்.
திரு டெட், லூவி பாடி (Lewy Body) எனப்படும் முதுமை மறதியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
1980ஆம் ஆண்டு அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் அவர் CNN நிறுவனத்தைத் தொடங்கினார்.
உலகில் 24 மணி நேரமும் இடைவிடாமல் செய்தி ஒளிபரப்பு வழங்கிய முதல் நிறுவனம் CNN.
அது தொலைக்காட்சிச் செய்தித் துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது.
உலக அளவில் செய்தித் துறையை மாற்றியமைத்தது.
1990, 1991 ஆகிய ஆண்டுகளில் வளைகுடாப் போர் (Gulf war) ஒளிபரப்பின் மூலம் CNN உலகத்தின் கவனத்தை ஈர்க்க தொடங்கியது.
ஊடகத் துறைக்கு அப்பால் திரு டெட் தொண்டூழியத்திலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் ஈடுபட்டதாக CNN தெரிவித்தது.
ஐக்கிய நாட்டு நிறுவனத்திற்கு 1 பில்லியன் டாலர் நன்கொடை அளித்தார்.
"திரு டெட் நம் வாழ்விலும் உலக அளவிலும் ஏற்படுத்திய மாபெரும் மாற்றங்களை அங்கீகரிப்போம்," என்று CNN தலைமை நிர்வாகி அறிக்கையில் தெரிவித்தார்.