"விமானச்சீட்டு விலைகள் கணிசமாகக் கூடலாம்"
உயரும் எரிபொருள் விலையால் விமானச்சீட்டு விலைகள் கணிசமாகக் கூடலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
ஈரான் போரால் மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவின் எண்ணெய் இறக்குமதியில் பாதி மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வருகிறது.
இந்நிலையில் விமான எரிபொருள் விலை 80 விழுக்காட்டுக்கும் மேல் அதிகரித்துள்ளதாக BBC ஊடகம் சொன்னது.
மத்திய கிழக்கு நாடுகள் சிலவற்றின் வான்வெளி மூடப்பட்டிருக்கும் நிலையில் சில விமானச் சேவைகள் வேறு பயணப்பாதையில் செல்லவேண்டியுள்ளது.
அதற்கு அதிக எரிபொருளைப் பயன்படுத்த வேண்டியிருப்பதால் விமானச்சீட்டு விலைகள் மேலும் அதிகரிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.
லண்டனிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானச்சீட்டுகளைப் பார்த்தால்...
அடுத்த ஒரு வாரத்துக்கு விற்பனையாகும் ஆக மலிவான விமானச்சீட்டுகள் 809 வெள்ளி முதல் 1,500 வெள்ளி வரை விலைபோகின்றன.