Skip to main content
தவறான ஓடுபாதையில் இறங்கிய விமானம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

தவறான ஓடுபாதையில் இறங்கிய விமானம்

வாசிப்புநேரம் -
தவறான ஓடுபாதையில் இறங்கிய விமானம்

கோப்புப் படம்: Reuters

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

தென் கொரியாவின் பூசான் (Busan) நகரில் சைனா ஏர்லைன்ஸ் (China Airlines) விமானமொன்று தவறான ஓடுபாதையில் தரையிறங்கியது.

விமானம் நேற்று  (13  ஜூன்) தைவானின் தாயுவான் நகரிலிருந்து பூசான் நகருக்குச் சென்றபோது சம்பவம் நடந்ததாகத் தைவான் அரசாங்க ஊடகம் சொன்னது.

விமானி ஆகாயப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் அறிவுரையைக் கேட்காமல் வேறு ஓடுபாதையில் தரையிறங்கியதாக அது கூறியது.

சைனா ஏர்லைன்ஸ் நிர்வாக அளவில் விசாரணை நடத்துவதாக ஊடகம் தெரிவித்தது.

சம்பவத்தால் பூசான் நகரிலிருந்து மீண்டும் புறப்படவிருந்த சைனா ஏர்லைன்ஸின் பயணம் தாமதமடைந்தது.

நேற்று செல்லவிருந்த விமானம் இன்றிரவு புறப்படுவதாக தைவான் அரசாங்க ஊடகம் சொன்னது.

பாதிக்கப்பட்ட பயணிகளுக்குத் தங்கும் வசதியும் உணவும் ஏற்பாடு செய்யப்பட்டதாக அது கூறியது.

ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்