Skip to main content
பாதை தவறிய விமானம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம் trending

பாதை தவறிய விமானம்

வாசிப்புநேரம் -
பாதை தவறிய விமானம்
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஜெர்மனியின் பிராங்ஃபர்ட் (Frankfurt) விமான நிலையத்தில் ஒரு விமானம் எதிர்த்திசையில் புறப்பட்டது.

சம்பவம் செவ்வாய்க்கிழமை (20 அக்டோபர்) நடந்தது.

விமானம் துருக்கியேவுக்குச் செல்லவிருந்தது. 

பேகசஸ் ஏர்லைன்ஸ் (Pegasus Airlines) விமானம் ஓடுபாதையிலிருந்து தென் திசையில் பறக்க அனுமதி பெற்றிருந்தது.

விமானம் எதிர்த்திசையில் அதாவது வடக்குப் பக்கத்தை நோக்கிச் சென்றதாக The Aviation Herald விமானத் துறை ஊடகம் சொன்னது.

அது தரையிலிருந்து சிறிது உயரம் பறக்கவும் தொடங்கியது!

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரி அதைக் கவனித்ததும் உடனடியாக விமானியைத் தொடர்புகொண்டார்.

விமானி மீண்டும் விமானத்தைத் தரையிறக்கினார்.

அவர் 7 நிமிடங்களுக்குப் பின் சரியான திசையில் விமானத்தை இயக்கினார்.

அதிகாரிகளிடம் தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக The Aviation Herald கூறியது.

ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்