Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

எங்கும் பிளாஸ்டிக்... மனித உடலிலும் காற்றிலும் பிளாஸ்டிக்...

வாசிப்புநேரம் -

கடல் மட்டம், மலை உச்சி என்று எங்குப் பார்த்தாலும் பிளாஸ்டிக் குப்பைகள்... மனிதர்கள் பலரின் நடவடிக்கைகளில் ஒன்று பிளாஸ்டிக் குப்பைகளைச் சரியான இடத்தில் வீசாமல் இருப்பது!

அதன் காரணமாக மனிதர்களின் உடலிலும் நுண்ணிய அளவில் பிளாஸ்டிக் இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

காற்றில் உள்ள பிளாஸ்டிக் துகள்களை மனிதர்கள் சுவாசிப்பதால் அவை அவர்களின் உடலுக்குள் செல்கின்றன. குறிப்பாகச் செயற்கைப் பொருள்களால் உருவாக்கப்பட்ட துணிகளின் Polyethylene terephthalate எனும் பிளாஸ்டிக் மனிதர்களின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

அத்தகைய பிளாஸ்டிக் துகள்களை உடல் 
உள்வாங்கும்போது ஏற்படும் பின்விளைவுகள் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. 

கர்ப்ப காலத்தில் கருவுக்கு உயிர்வாயுவும் ஊட்டச்சத்தும் அளிக்கும் நஞ்சுக்கொடித் திசுக்களிலும் பிளாஸ்டிக் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதனால் கருவின் வளர்ச்சி பாதிப்படையலாம் என்ற அச்சமும் நிலவுகிறது. 

"எங்குப் பார்த்தாலும் பிளாஸ்டிக் இருப்பதால் ஒருவர் உணவுப் பழக்கங்களை மாற்றினாலும் பிளாஸ்டிக் உட்கொள்வதைத் தவிர்க்கமுடியாது" 

என்று ஆய்வாளர்கள் சிலர் கருதுகின்றனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்