Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைக்க உலகின் முதல் உடன்பாடு - எட்டுவதில் சிக்கல்

வாசிப்புநேரம் -
பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைக்கும் நோக்கம் கொண்ட உலகின் முதல் உடன்பாட்டுக்கான ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.

தென்கொரியாவில் சந்தித்த நாடுகள் ஒருமித்த கருத்தை எட்டத் தவறின.

எண்ணெய் உற்பத்தி செய்யும் சில நாடுகள் ஓர் உடன்பாட்டை இந்த ஆண்டுக்குள் செய்திருக்க வேண்டும். ஆனால் சில தீர்வுகாணப்படாத விவகாரங்களால் உடன்பாட்டை எட்டமுடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

அடுத்த ஆண்டு மீண்டும் பேச்சு தொடங்கும் என்று நம்பப்படுகிறது.

சுமார் 200 நாடுகள் ஈடுபட்டுள்ள சந்திப்புகள் கடந்த ஈராண்டாக நடைபெறுகின்றன.
ஆதாரம் : AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்