Skip to main content
"2060ஆம் ஆண்டுக்குள் பிளாஸ்டிக் தயாரிப்பு மும்மடங்காகிவிடும்"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

"2060ஆம் ஆண்டுக்குள் பிளாஸ்டிக் தயாரிப்பு மும்மடங்காகிவிடும்"

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் அனைத்துலக ஒப்பந்தம் குறித்த இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தை ஜெனிவாவில் (Geneva) தொடங்கியுள்ளது.

180 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் அதில் கலந்துகொண்டிருக்கின்றனர்.

இப்போதே சரிசெய்யாவிட்டால் நிலைமை கைமீறிப் போய்விடும்.

2060ஆம் ஆண்டுக்குள் பிளாஸ்டிக் தயாரிப்பு மும்மடங்காகிவிடும் என்று பொருளியல் ஒத்துழைப்பு, வளர்ச்சி அமைப்பு கூறுகிறது.

ஜெனிவாவில் தொடங்கியிருக்கும் கூட்டம் அடுத்த வாரம் வரை தொடரும்.

ஆறாம் சுற்றுப் பேச்சு நடத்துவது இப்போதைய கூட்டத்தின் நோக்கம்.

பிளாஸ்டிக் தயாரிப்புக்கான வரம்பு, பராமரிப்பு, பாதிப்பை ஏற்படுத்தும் ரசாயனங்கள், வளரும் நாடுகளுக்கான நிதி போன்ற அம்சங்களில் கருத்துவேறுபாடுகள் நிலவுகின்றன.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்