Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிளாஸ்டிக் தூய்மைக்கேடு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரிப்பு: ஆய்வாளர்கள்

வாசிப்புநேரம் -
பிளாஸ்டிக் தூய்மைக்கேடு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரிப்பு: ஆய்வாளர்கள்

(படம்: Antara Foto/Aditya Pradana Putra/Handout via REUTERS)

பிளாஸ்டிக் தூய்மைக்கேடு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகின் பெருங்கடல்களில் 170 டிரில்லியனுக்கும் அதிகமான பிளாஸ்டிக் பொருள்கள் மிதப்பதாக அவர்கள் கூறினர்.

2005ஆம் ஆண்டில் பெருங்கடல்களில் 16 டிரில்லியன் பிளாஸ்டிக் பொருள்கள் இருந்ததாகக் கூறப்பட்டது.

உடனடியாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால் நிலைமை கட்டுக்கடங்காமல் போகக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

2004இலிருந்து பிளாஸ்டிக் உற்பத்தியில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பைத் தொடர்ந்து, தூய்மைக்கேடு மோசமடைந்துள்ளதை ஆய்வாளர்கள் சுட்டினர்.

பிளாஸ்டிக் பயன்பாடு தற்போதைய நிலையில் தொடர்ந்தால், அதை அகற்றும் முயற்சிகள் பலனளிக்காமல் போகக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

அத்துடன் பெருங்கடல்களில் மட்டுமல்லாது மனிதர்களின் உடலிலும் நுண்ணிய அளவில் பிளாஸ்டிக் இருப்பதாக ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிளாஸ்டிக்கை உட்கொள்வதால் ஏற்படும் புதியவகை நோய், கடல்வாழ் உயிரினங்களுக்கு இருப்பதும் தெரியவந்துள்ளது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்