நியூஸிலந்தின் புதிய பிரதமருக்குப் பிரதமர் லீ வாழ்த்து

(படம்: Marty MELVILLE / AFP)
பிரதமர் லீ சியென் லூங், நியூஸிலந்தின் புதிய பிரதமராகப் பொறுப்பேறுள்ள திரு. கிறிஸ் ஹிப்கின்ஸுக்கு (Chris Hipkins) வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.
சிங்கப்பூரும் நியூஸிலந்தும் ஆழமான, நீண்டகால நட்பைப் பகிர்ந்துகொள்வதாகத் திரு. லீ கூறினார்.
சிறிய, திறந்த பொருளியல்களைக் கொண்ட சிங்கப்பூரும் நியூஸிலந்தும் பல விவகாரங்களில் ஒரே மாதிரியான கருத்துகளைக் கொண்டுள்ளதை அவர் சுட்டினார்.
தடையற்ற வர்த்தமும் அனைத்துலகச் சட்டமும் அவற்றில் அடங்கும்.
மேம்படுத்தப்பட்ட பங்காளித்துவத்தின் கீழ்,
வர்த்தகம், தற்காப்பு, அறிவியல்-தொழில்நுட்பம், மக்கள் பரிமாற்றம், பருவநிலை மாற்றம் ஆகிய அம்சங்களில் இரு நாடுகளும் ஒத்துழைக்கின்றன.
இரு நாடுகளும் COVID-19 நோய்ப்பரவலின்போது வலுவாக ஒத்துழைத்ததைத் திரு. லீ நினைவுகூர்ந்தார்.
அப்போது சிங்கப்பூரும் நியூஸிலந்தும் விநியோகத் தொடர்கள் நீடிப்பதை உறுதிசெய்ததையும் அவர் சுட்டினார்.