Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உக்ரேனுக்குப் போர் விமானங்களை அனுப்பும் முதல் நேட்டோ நாடு போலந்து...

வாசிப்புநேரம் -
போலந்து உக்ரேனுக்குப் போர் விமானங்களை அனுப்பவிருக்கிறது.

நேட்டோ கூட்டணியில் இடம்பெற்றுள்ள நாடு ஒன்று அவ்வாறு செய்யவிருப்பது இதுவே முதன்முறை.

முதலில் 4 MiG-29 ரகப் போர் விமானங்கள் உக்ரேனுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று போலந்து அதிபர் ஆண்ட்ரே டூடா (Andrzej Duda) தெரிவித்தார்.

மேற்கத்திய நட்பு நாடுகள் உக்ரேனுக்குப் போர் விமானங்களை அனுப்புமாறு கீவ் இதற்கு முன்னர் பல முறை கோரியிருக்கிறது.

ஆனால் இதுவரை யாரும் அவ்வாறு செய்ய உறுதிகூறவில்லை.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட F-16 ரகப் போர் விமானங்களை உக்ரேன் பெறவிரும்புகிறது.

அதன் வழி ரஷ்யப் போரில் கணிசமான முன்னேற்றத்தைக் காணமுடியும் என்றும்;
அதன் தற்காப்புத் திறன்கள் வலுப்பெறும் என்றும் உக்ரேன் நம்புகிறது.

உக்ரேனுக்குக் கூடுதலான போர்க் கருவிகளை அனுப்பும் முயற்சிகளைப் போலந்து வழிநடத்துகிறது.

அவ்வாறு மேற்கத்திய நாடுகளும் செய்யவேண்டும் என்று அது வலியுறுத்தியிருக்கிறது.
ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்