உலகம் trending
இணையவாசிகள் இதயத்தைக் கொள்ளைகொள்ளும் மொமொட்டா
வாசிப்புநேரம் -
படம்: threads/@matchaaakeun
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
ஜப்பானில் தனது குறும்பினால் பிரபலமாகியுள்ளது ஒரு 8 மாதப் பனிக்கரடிக் குட்டி.
மொமொட்டா என்றழைக்கப்படும் அது அகிட்டா வட்டாரத்தில் (Akita) இருக்கும் ஓகார் (Oga) மீன் காட்சியகத்தில் (Aquarium) உள்ளது.
போக்குவரத்துக் கூம்பை வைத்து அது செய்யும் குறும்புச் செயல்கள் அங்கு வரும் மக்களையும் வெளிநாட்டவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.
கூம்பைத் தலையில் மாட்டிக்கொண்டு நடப்பது...
அதைச் சுழற்றிப்போட்டு விளையாடுவது...
கூம்பை வைத்து அதன் தாயைக் குறும்புத்தனமாகச் சீண்டுவது...
இப்படி அது செய்யும் வேடிக்கையான செயல்களின் காணொளிகள் சமூக ஊடகத்தில் இணையவாசிகளின் மனத்தைக் கவர்ந்துள்ளன.
சிலர் அதன் குறும்புத்தனம் சிறுபிள்ளைகளின் சுட்டித்தனத்தைப் போன்றே உள்ளது என்றனர்.
வேறு சிலர் அதன் செயல்கள் தங்களை வயிறுகுலுங்கச் சிரிக்க வைப்பதாகக் கூறினர்.
சிலரோ அதன் தாயின் பொறுமையை வேடிக்கையாகப் பாராட்டினர்.

ஆதாரம் : Others