சுவிட்சர்லந்துத் தீ: மாண்ட 40 பேரில் நால்வரின் சடலம் அடையாளம் காணப்பட்டது
வாசிப்புநேரம் -
சுவிட்சர்லந்தில் மதுக்கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மாண்டோரில் நால்வர் அடையாளம் காணப்பட்டிருப்பதாய்க் காவல்துறை தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லந்தைச் சேர்ந்த இரு பெண்கள், இரு ஆண்களின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் குடும்பங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அவர்கள் 16 வயதுக்கும் 21 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
மற்ற சடலங்களை அடையாளம்காணும் பணிகள் தொடர்கின்றன.
புத்தாண்டுக்கு முதல்நாள் நடந்த அந்தச் சம்பவத்தில் 40 பேர் உயிரிழந்தனர்.
சுமார் 200 பேர் கூடியிருந்த மதுபானக் கூடத்தில் வெளியேறிச் செல்ல ஒரேயொரு வழி மட்டுமே இருந்தது தெரியவந்துள்ளது.
தீ விபத்தில் சுமார் 120 பேர் காயமடைந்தனர். அவர்களில் பெரும்பாலோர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
அங்கிருக்கும் மருத்துவமனைகள் திணறுவதால் அவர்களில் சிலர் அருகே இருக்கும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
தீ விபத்துக்கு மது போத்தல்களில் இருந்த நெருப்புப் பொறி காரணமாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
நெருப்புப் பொறி மதுக்கூடத்தின் கூரைக்கு மிக அருகில் சென்றபோது
தீப்பற்றி இருக்கலாம் என்று அதிகாரிகள் கூறினர்.

ஆதாரம் : Others