Skip to main content
60க்கும் அதிகமான கால்நடைகளைப் பட்டினி போட்டுக் கொன்ற சந்தேகம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

60க்கும் அதிகமான கால்நடைகளைப் பட்டினி போட்டுக் கொன்ற சந்தேகம்- தென்கொரியாவில் விசாரணை

வாசிப்புநேரம் -
தென் கொரியாவில் ஒரு பண்ணையில் 63 கால்நடைகள் பட்டினி போட்டுக் கொல்லப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

சௌத் ஜுல்லா (South Jeolla) மாநிலத்தில் இருக்கும் பண்ணையில் சில விலங்குகள் மாண்டு கிடப்பதாக உள்ளூர்வாசி ஒருவர் காவல்துறையிடம் புகார் அளித்ததாக The Korea Herald ஊடகம் சொன்னது.

பண்ணையின் 67 விலங்குகளில் 63 மாண்டதை அதிகாரிகள் பின்னர் அறிந்தனர்.

பல்வேறு பிரச்சினைகளால் பண்ணையைப் பார்த்துக்கொள்ள முடியவில்லை என்று அதன் உரிமையாளர் சொன்னதாக The Korea Herald குறிப்பிட்டது.

விலங்குகள் உண்மையில் பட்டினிப் போடப்பட்டிருந்தால் உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம்.

அவை நோய்வாய்ப்பட்டதற்கோ காயமுற்றதற்கோ அறிகுறி இல்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

விலங்குகள் மிகவும் மெலிந்து காணப்பட்டன.

அவை மாண்டதற்கான காரணத்தை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்