Skip to main content
திருடர்களைப் பிடிக்க மாறுவேடமிட்ட காவல்துறை அதிகாரிகள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

திருடர்களைப் பிடிக்க மாறுவேடமிட்ட காவல்துறை அதிகாரிகள்

வாசிப்புநேரம் -
பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் (Rio de Janeiro) திருவிழா...

கைத்தொலைபேசிகளைக் களவாடும் திருடர்கள் அங்கு நிறைய இருப்பர்.

அவர்களைக் கையும் களவுமாகப் பிடிக்கக் காவல்துறை அதிகாரிகள் வித்தியாசமான முறைகளில் வேடமிட்டிருந்தனர்.

கேப்டன் அமெரிக்கா (Captain America), பேட்மென் (Batman) உள்ளிட்ட வேடங்களைப் போட்டுக்கொண்டு அதிகாரிகள் கூட்டத்தோடு கூட்டமாகக் கலந்தனர்.

திருடர்கள் 2 பேர் வசமாக மாட்டிக்கொண்டனர்.

ஆளில்லா வானுர்தி வைத்து எடுக்கப்பட்ட காணொளியில் பெண் ஒருவர் திருவிழாவுக்கு வந்தவரிடமிருந்து கைத்தொலைபேசியைத் திருடி இன்னொருவரிடம் கொடுத்தது தெரிந்தது.

நேற்று முன்தினம் (13 பிப்ரவரி) தொடங்கிய திருவிழா அடுத்த வாரம் சனிக்கிழமை (21 பிப்ரவரி) வரை நீடிக்கும்.

பல மில்லியன் சுற்றுப்பயணிகளும் உள்ளூர்வாசிகளும் திருவிழாவிற்கு வருவர்.

அப்போது குற்றங்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயரும்.
 
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்