Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

சந்தேக நபரைப் பிடிக்க முயன்ற காவல்துறை அதிகாரி... விரையும் காரிலிருந்து தொங்கினார்

வாசிப்புநேரம் -
சந்தேக நபரைப் பிடிக்க முயன்ற காவல்துறை அதிகாரி... விரையும் காரிலிருந்து தொங்கினார்
படம்: Reddit/whusler
விரையும் கார்...

அதன் ஓட்டுநரைப் பிடிக்க ஓட்டமாக ஓடிய காவல்துறை அதிகாரி...

காரின் சன்னலைப் பிடித்துக்கொண்டு தொங்கியவாறு அந்த நபரைத் தடுத்து நிறுத்த முயன்றார்.

மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் அது நடந்ததாக The Star ஊடகம் தெரிவித்தது.

அந்த நபர் வீடு ஒன்றுக்குள் புகுந்து பொருள்களைத் திருடியதாக நம்பப்படுகிறது. கூச்சிங் நகரின் மற்ற இடங்களில் மோட்டார்சைக்கிள்களையும் திருடியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

அவரை விசாரிக்க முயன்றபோது அவர் ஒத்துழைக்கவில்லை. காரை ஓட்டித் தப்ப முயன்றார்.

அவரைத் துரத்தும்போது காவல்துறை அதிகாரி அவருடைய கார் சன்னலிலிருந்து தொங்கினார்.

அதன் காணொளி Reddit தளத்தில் பதிவிடப்பட்டது.

காணொளியில் அதிகாரி கைவழுக்கி விழுவது தெரிந்தது. ஆனால் அதன் பிறகு அந்த நபரை மற்ற அதிகாரிகள் துரத்தினர்.

இறுதியில் சந்தேக நபர் பிடிபட்டார். சிறுநீர்ச் சோதனையின்போது அவர் போதைப்பொருள் உட்கொண்டது தெரிய வந்தது.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்