Skip to main content
ஜப்பானில் நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கியது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஜப்பானில் நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கியது

வாசிப்புநேரம் -
ஜப்பானில் நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கியது

(படம்: Manami Yamada/Reuters)

ஜப்பானிய நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஜப்பானிய நேரப்படி காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்களிப்பு இரவு 8 மணிக்கு நிறைவடையும்.

105 மில்லியனுக்கும் அதிகமானோர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். நாடு முழுதும் 45,000 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

📌 சுமார் 1,300 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனனர்.

📌 நாடாளுமன்றத்தின் மொத்த இடங்கள் 465.

📌 அவற்றுள் 289 இடங்களுக்கான பிரதிநிதிகள் நேரடியாகத் தெரிவு செய்யப்படுவர்.

📌 எஞ்சிய 176 பேர் விகிதாசார அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

பெரும்பான்மை பலத்துடன் புதிய அரசாங்கம் அமைக்க ஒரு கட்சி குறைந்தது 233 இடங்களைப் பிடிக்க வேண்டும்.

இன்றைய தேர்தலில் பிரதமர் ஷிகெரு இஷிபாவின் (Shigeru Ishiba) ஆளும் மிதவாத ஜனநாயகக் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம் என்று கருத்துக்கணிப்புகள் முன்னுரைக்கின்றன.

அது உண்மையானால் சிறிய கட்சிகளுடன் சேர்ந்து அக்கட்சி ஆட்சியமைக்க முயலும் என்று கூறப்படுகிறது.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்