Skip to main content
டயருக்குள் மட்டக்குதிரை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம் trending

டயருக்குள் மட்டக்குதிரை

வாசிப்புநேரம் -
டயருக்குள் மட்டக்குதிரை

Facebook/RSPCA (England & Wales)

இங்கிலாந்தில் விலங்கு நலன் அமைப்புக்கு வித்தியாசமான கோரிக்கை வந்தது.

டயருக்குள் சிக்கிய மட்டக்குதிரையைக் காப்பாற்றவேண்டுமென்று...

ஸ்டோக் ஓன் டிரென்ட் (Stoke on Trent ) நகருக்குச் சென்றுபார்த்தால் மட்டக்குதிரை உழவு இயந்திரத்தின் டயருக்குள் சுருண்டு கிடந்தது.

சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட படங்களில் அதன் வாய்ப்பகுதியை மட்டும் வெளியே  காணமுடிகிறது.

அது மிகவும் அழுக்காக இருப்பதையும் பார்க்கமுடிகிறது.

டயரை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்தாலும் இளம் மட்டக்குதிரையால் சுவாசிக்க முடிந்தது.

மீட்பு ஊழியர் கவனமாக அதன் முன்னங்கால்களை வெளியே கொண்டுவந்தார்.

பின்னர் தோள்பகுதியையும் கழுத்துப் பகுதியையும் விடுவித்தார்.

மட்டக்குதிரை டயரிலிருந்து வெளியானபோது தொடக்கத்தில் நடக்கத் தடுமாறியது.

அது இப்போது நலமாக இருப்பதாகவும் நன்றாக நடப்பதாகவும் RSPCA விலங்கு நலன் அமைப்பு Facebookஇல் கூறியது.

டயரில் உணவு இருக்கலாம் என்று எண்ணி மட்டக்குதிரை உள்ளே சென்றிருக்கும் என்று நம்பப்படுகிறது.

ஆதாரம் : Others/Social media

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்