Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

'சிங்கப்பூர்' என்ற இசைக் காணொளியை வெளியிட்ட அமெரிக்க இசைக் குழு

வாசிப்புநேரம் -
அமெரிக்காவின் பிரபலமான இசைக்குழுக்களில் ஒன்றான OneRepublic 'சிங்கப்பூர்' எனும் பெயரில் இசைக் காணொளியை வெளியிட்டுள்ளது.

Artificial Paradise என்ற இசைத்தொகுப்பில் சுமார் மூன்றரை நிமிட இசை இடம்பெற்றுள்ளது.

காணொளியைத் தயாரிக்க சிங்கப்பூரின் பல்வேறு கலாசாரங்களும் அதிலிருக்கும் மரபுடைமைக் கட்டடங்களும் நவீனக் கட்டடங்களும் தூண்டுதலாய் இருந்ததாகக் குழு சொன்னது.

குழு சமூக ஊடகத்தில் வெளியிட்ட காணொளி ஒன்றில் உறுப்பினர்கள் Marina One, பெரனாக்கான் அரும்பொருளகம், ஓல்ட் ஹில் ஸ்ட்ரீட் காவல் நிலையம், ஆர்மேனியன் (Armenian) ஸ்ட்ரீட் ஆகிய இடங்களில் நடந்துசெல்வதைக் காணமுடிகிறது.

கடந்த மாதம் சிங்கப்பூரில் F1 கார்ப்பந்தயம் நடந்த சமயத்தில் OneRepublic காணொளிக்கான படப்பிடிப்பில் ஈடுபட்டது.

சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகம் பிரபல இசை நட்சத்திரங்களுடன் இணைந்து செய்யும் திட்டங்களில் இதுவும் ஒன்று.

அது Billie Eilish, Charlie Puth, Jackson Wang ஆகியோருடனும் பணியாற்றியுள்ளது.
 
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்