சுவாசப் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போப் பிரான்சிஸ்
வாசிப்புநேரம் -
(படம்: Vincenzo PINTO / AFP)
போப் பிரான்சிஸ் சுவாசப் பிரச்சினை காரணமாக ரோமில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் சில நாள்கள் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியிருப்பதாக வத்திகன் கூறியது.
அண்மை நாள்களில் 86 வயது போப் பிரான்சிஸ் மூச்சுவிடச் சிரமப்பட்டதாக வத்திகன் பேச்சாளர் மத்தேயு புருணி (Matteo Bruni) தெரிவித்தார்.
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையின்போது போப்புக்குச் சுவாசக் கோளாறு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
அவருக்குக் கோவிட் கிருமித்தொற்று இல்லை என்றும் திரு. புருணி கூறினார்.

ஆதாரம் : AFP