Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

"மனிதநேயம் அன்றாடச் செயல்களின் அடையாளமாக இருக்கட்டும்": போப் பிரான்சிஸ் ஆற்றிய கடைசி ஈஸ்டர் உரை

வாசிப்புநேரம் -
"மனிதநேயம் அன்றாடச் செயல்களின் அடையாளமாக இருக்கட்டும்":  போப் பிரான்சிஸ் ஆற்றிய கடைசி ஈஸ்டர் உரை

(கோப்புப் படம்: Pool via AP/Willy Kurniawan)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

நேற்று ஈஸ்டர் கொண்டாட்டத்தின்போது உரையாற்றிய போப் பிரான்சிஸ் இன்று காலமான செய்தி பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

உலகம் முழுதும் அமைதி நிலவவேண்டும் என்று தாம் விரும்புவதாகப் போப் பிரான்சிஸ் தமது உரையில் குறிப்பிட்டார்.

ஒருவருக்கொருவர் அன்பு காட்டி அக்கறை செலுத்தி ஒற்றுமையாக வாழவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

காஸாவில் சண்டை நிறுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்படவேண்டும் என்றும் அவர் வேண்டிக்கொண்டார்.

லெபனானிலும் சிரியாவிலும் வாழும் கிறிஸ்துவர்களையும் அவர் நினைவுகூர்ந்தார்.

சண்டை நிலவும் உக்ரேன், கலவரம் நடக்கும் ஆப்பிரிக்கா, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மார் எனப் பல்வேறு நாடுகளுக்காகவும் மக்களுக்காகவும் அவர் வேண்டிக்கொண்டார்.

மனிதநேயக் கொள்கைகள் நமது அன்றாடச் செயல்களின் அடையாளமாக இருக்கட்டும் என்றார் போப் பிரான்சிஸ்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்