Skip to main content
புனித வெள்ளி பிரார்த்தனையில் கலந்துகொள்ளாத போப் பிரான்சிஸ்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

புனித வெள்ளி பிரார்த்தனையில் கலந்துகொள்ளாத போப் பிரான்சிஸ்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

நிமோனியா (pneumonia) நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வரும் போப் பிரான்சிஸ் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் புனித வெள்ளி பிரார்த்தனையில் கலந்துகொள்ளவில்லை.

நேற்று நடந்த அந்தப் பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கான கத்தோலிக்கர்கள் கலந்துகொண்டனர்

ரோமின் கொலசியத்தில் நடந்த அந்தப் பிரார்த்தனையில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகப் போப் பங்கேற்கவில்லை.

2013ஆம் ஆண்டிலிருந்து போப்பாக இருந்துவரும் அவர் 5 வாரங்களாக நிமோனியா நோய்த்தொற்றுடன் போராடினார்.

தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவர் படிப்படியாக நோயிலிருந்து குணமடைந்து வருகிறார்.

வாரயிறுதியில் நடக்கவிருக்கும் ஈஸ்டர் பிரார்த்தனையில் போப் கலந்துகொள்வாரா என்பது பற்றி வத்திகன் ஏதும் தெரிவிக்கவில்லை.
ஆதாரம் : Reuters

மேலும் செய்திகள் கட்டுரைகள்