Skip to main content
போப் பிரான்சிஸ் காலமானார்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

போப் பிரான்சிஸ் காலமானார் - வத்திகன் தகவல்

வாசிப்புநேரம் -
போப் பிரான்சிஸ் காலமானார் - வத்திகன் தகவல்

(கோப்புப் படம்: REUTERS/Remo Casill)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

போப் பிரான்சிஸ் காலமானார்.

அவருக்கு வயது 88.

காசா சண்ட்டா மார்ட்டாவில் (Casa Santa Marta) உள்ள அவரது இல்லத்தில் அவர் உயிர் பிரிந்ததாக வத்திகன் தெரிவித்தது.

நிமோனியா (pneumonia) நோய்த்தொற்றினால் அவர் முன்னதாக 5 வாரங்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

நோய்த்தொற்றினால் அவரது நுரையீரல்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

கடந்த மாதம் 23ஆம் தேதி அவர் மருத்துவமனையிலிருந்து இல்லம் திரும்பி குணமடைந்து வந்தார்.

இம்மாதத் தொடக்கத்தில் அவர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாய் வத்திகன் தெரிவித்திருந்தது.

இதற்கிடையில் அவரது உடல்நிலை குறித்து போப் பிரான்சிஸ் அறிக்கைகளையும் வெளியிட்டு வந்தார்.

உடல் வலிமையை இழந்தாலும் அன்பு செலுத்துவதையும் இறை நம்பிக்கையுடன் இருப்பதையும் ஒருபோதும் நிறுத்தக்கூடாது என்று அவர் அந்த அறிக்கைகளில் கூறியிருந்தார்.

1936ஆம் ஆண்டில் அர்ஜெண்ட்டினாவில் பிறந்த போப் பிரான்சிஸ் 2013ஆம் ஆண்டில் கத்தோலிக்கச் சமயத் தலைவராகப் பொறுப்பேற்றார்.

கடந்த ஆண்டு சிங்கப்பூர் உட்பட ஆசிய பசிபிக் வட்டாரத்தில் உள்ள 4 நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொண்டார்.
ஆதாரம் : Reuters

மேலும் செய்திகள் கட்டுரைகள்